News August 8, 2025
என் நாட்டை பற்றி முடிவு செய்ய டிரம்ப் யார்? சீமான் கேள்வி

டிரம்ப்பின் வரிவிதிப்பு பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு நாட்டை கொண்டு செல்லும் என சீமான் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க ஒரே நாட்டைச் சார்ந்திருப்பது போராபத்து எனவும், என் நாடு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க டிரம்ப் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்னையில் துப்புறவு தொழிலாளர்கள் பல நாள்கள் போராடி வருவதுதான் தமிழக ஆட்சியின் அவ லட்சணம் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News August 8, 2025
ரஜினி பட ஹீரோயின் சகோதரன் அடித்துக் கொலை!

பிரபல நடிகை ஹுமா குரேஷியின் உறவினரான ஆசிஃப் குரேஷி, டெல்லி நிசாமுதின் பகுதியில் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தை பார்க் செய்வது தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும், இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹுமா ‘காலா’, ‘வலிமை’ படங்களில் நடித்துள்ளார்.
News August 8, 2025
வெறும் 45 பைசாவில் ₹10 லட்சம் வரை காப்பீடு!

ரயில்வேயில் ஆன்லைன் டிக்கெட் புக் செய்யும் போது ‘Optional Travel Insurance’-ஐ கிளிக் செய்ய வேண்டும். உங்கள் மொபைல், இ-மெயிலுக்கு காப்பீடு நிறுவனம் தொடர்பு கொள்ளும். அதில் நாமினி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். Confirmed / RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த ₹10 லட்சம் காப்பீட்டை பெற முடியும். ரயில் விபத்து, தீவிரவாத தாக்குதல், வன்முறை / திருட்டு சம்பவங்களின் போது க்ளைம் செய்யலாம்.
News August 8, 2025
திமுகவுக்கு ஊழலுக்கான விருது: EPS காட்டம்

திமுகவின் 50 மாத ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாகவும் EPS குற்றம்சாட்டியுள்ளார். சிவகாசியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், 4 ஆண்டுகளில் சுமார் 22,000 கோடி கொள்ளை அடித்துள்ளதாகவும், ஊழலுக்காக அவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும் என்றும் காட்டமாக விமர்சித்தார். மேலும், VCK, CPM, CPI, காங்கிரஸ் என கூட்டணி கட்சிகளை நம்பியே திமுக இருக்கிறது என்றார்.