News September 1, 2025

அஜித்துடன் இருக்கும் இந்த இளம் ரேஸர் யார்?

image

யாருப்பா இந்த குட்டி ரேஸர்? என்ற கேள்வியே தற்போது இணையத்தில் கேட்கப்பட்டு வருகிறது. அஜித்குமார் உடன் இருக்கும் இவர், சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் (13). FIM MiniGP ஜெர்மனி பைக் ரேஸில் பங்கேற்று வரும் இவர், இதுவரை பல ரேஸ்களில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்நிலையில் தான், ஸ்பெயினில் நடக்கவுள்ள பைக் ரேஸில் கலந்துகொள்ளவுள்ள ஜேடனுக்கு அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Similar News

News September 4, 2025

டீ, காபி விலை குறையுமா?

image

காபிக்கு தேவையான வறுத்த சிக்கோரி, எசன்ஸ் உள்ளிட்டவற்றிற்கான GST வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டன்ட் டீ, Iced டீ பவுடர் ஆகியவற்றிற்கும் 5% ஆக GST குறைக்கப்பட்டுள்ளது. இதனால் டீ, காபியின் விலை குறைய வாய்ப்புள்ளது. சமீபத்தில் தான் டீ, காபியின் விலை முறையே ₹15, ₹20 என உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த GST மாற்றம், வரி செலுத்தும் வருமான வரம்பிற்கு உட்பட்ட ஓட்டல்களுக்கே பொருந்தும்.

News September 4, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 4, ஆவணி 19 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை

News September 4, 2025

இந்த பொருள்களுக்கெல்லாம் இனி GST கிடையாது

image

*33 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், அரிய நோய்களுக்கான மருந்துகள்.
*தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடுகள்.
*நோட்புக்ஸ், பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்கள்.
*UHT பால், பனீர், பீட்சா பிரட், சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி.
56-வது GST கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்த GST சீர்திருத்தங்கள், செப்.22 முதல் அமலுக்கு வருகிறது.

error: Content is protected !!