News August 5, 2024
யார் இந்த கிட்டு (எ) ராமச்சந்திரன்? (4/4)

நெல்லை மாநகராட்சி தி.மு.க மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தற்போது 25 வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார். இவர் தற்போது 3வது முறையாக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் 3ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.
Similar News
News March 18, 2026
நாங்குநேரி அருகே சரமாரி வெட்டிக்கொலை

நாங்குநேரி அருகே உள்ள நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). விவசாயியான இவர் நேற்று தனது வயலுக்கு செல்வதற்காக பருத்திபாடு சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News March 18, 2026
நெல்லை அருகே தாய்-மகன் கைது

மானூர் அருகே ராமையன்பட்டி கண்டியப்பேரி கலாம்நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). கடந்த 14-ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற இவரது ஆடு திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சாந்தி(53), அவருடைய மகன் சுவாமிநாதன்(31) ஆகியோர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News March 18, 2026
திருநெல்வேலி: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற 23 வயது இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைப்பு.


