News September 6, 2025
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 6, 2025
மதராஸி நாயகி ருக்மினி வசந்த் கிளிக்ஸ்

‘ரெட் வெல்வட்’ கேக் போல் மின்னும் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ருக்மினி வசந்த். விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், நேற்று வெளியான ‘மதராஸி’ வாயிலாக அனைத்து தரப்பட்ட ரசிகர்களிடமும் சென்று சேர்ந்துள்ளார் என்றே கூறலாம். தொடர்ந்து ‘காந்தாரா: சாப்டர்1’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். மதராஸியில் ருக்மினியின் நடிப்பு எப்படி இருக்கிறது?
News September 6, 2025
ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில் ஜி.யு.போப்: ஸ்டாலின் புகழாரம்

அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ள CM ஸ்டாலின், ஜி.யு.போப் கல்லறையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவரது X பதிவில், 19 வயதில் தமிழகம் வந்த போப், தமிழ் சுவையை உலகறியச் செய்ய திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என குறிப்பிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில் ஒரு பேராசிரியராக தமிழ்த் தொண்டாற்றியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News September 6, 2025
மீண்டும் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்?

‘இட்லி கடை’ பட ரிலீஸில் மும்முரமாக உள்ளார் தனுஷ். இதனையடுத்து, விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ‘விராட பருவம்’ என்ற தெலுங்கு படத்தின் இயக்குநர் வேணு உடுகுலாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான Pre Production பணிகளும் நடக்கிறதாம். ஏற்கெனவே தெலுங்கு இயக்குநர்களுடன் வாத்தி, குபேரா படங்களில் தனுஷ் நடித்திருந்தார்.