News September 22, 2024

யார் இந்த இலங்கையின் புதிய அதிபர்?

image

அநுர குமார திசநாயகே, 1968ல் தம்புதேகம கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. படிக்கும்போதே JVP எனும் இடதுசாரி கட்சியில் இணைந்தார். 1987 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2004 கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார். பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தார். உழைக்கும் மக்களுக்கான அரசியலை பேசியதால் மக்கள் ஆதரவு அவருக்கு கிடைத்தது.

Similar News

News August 11, 2025

EC நீதிமன்றம் அல்ல: ப.சிதம்பரம் காட்டம்

image

புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம்(EC), நீதிமன்றம் போல் செயல்பட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பொறுப்புமிக்க நிர்வாக அமைப்புதான் EC என்றும் கூறியுள்ளார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரை நிராகரிக்க முடியாது என தெரிவித்த அவர் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் EC கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 11, 2025

காசாவில் கொல்லப்பட்ட 5 பத்திரிகையாளர்கள்

image

காசாவின் அல்-ஷிஃபா ஹாஸ்பிடலுக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் அல்ஜசிராவின் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிஃப் தீவிரவாதி என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இறப்புக்கு முன்னர் ஷெரிஃப் எழுதிய உருக்கமான கடிதத்தை அவரது நண்பர் X தளத்தில் பகிர்ந்துள்ளார். 22 மாத போரில் இதுவரை 200 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.

News August 11, 2025

யுத்த நாயகனின் ‘The Great Indian Escape’ பாத்துருக்கீங்களா?

image

மரணமடைந்த ‘<<17365976>>யுத்த நாயகன்<<>>’ டிகே பருல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘The Great Indian Escape’ (2019) என்ற படம் வெளிவந்தது. 1971 போரின் போது, பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இவர், சிறையில் இருந்து தப்பிக்கும் போது, தன்னுடன் சேர்த்து 2 இந்திய வீரர்களையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார். விமானப்படை வீரரான டிகே பருல்கர் தனது வீரத்திற்காக வாயு சேனா மற்றும் விஷிஷ்ட் சேனா பதக்கங்களை பெற்றுள்ளார்.

error: Content is protected !!