News August 17, 2024
ODI கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் யார்?

ODI கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதலில் யார் சதமடித்தது என்பது தெரியுமா என்றால் கேள்விக்குறியே. அந்தப் பெருமை உலக கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ்வையே சேரும். 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்கள் ( 138 பந்துகள்) குவித்ததே முதல் சதமாகும். அதுவும் இந்தியாவின் 45ஆவது போட்டியில் அதை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அமர்நாத் 1933இல் முதல் சதமடித்தார்.
Similar News
News April 28, 2025
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் பலி 52,000ஆக அதிகரிப்பு

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் பலியானோரின் எண்ணிக்கை 52,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவுக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 52,243 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
News April 28, 2025
தயாளு அம்மாளுக்கு தீவிர சிகிச்சை

முதல்வர் ஸ்டாலினின் தாயார் அம்மாளுக்கு சென்னை தனியார் ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் நேற்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை சீராக இருப்பதாக ஹாஸ்பிடல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
News April 28, 2025
விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவில் முக்கிய பொறுப்பு?

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்.30-ல் தருமபுரியில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் கணக்கில், ‘பத்தோடு பதினொன்று நீ இல்லையே, பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி..!’ என பதிவிடப்பட்டுள்ளது.