News January 20, 2025
‘பிக் பாஸ் 9’ தொகுப்பாளர் யார்?

‘பிக் பாஸ் 9’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி தொடர்வார் என விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 7 சீசன்களில் இல்லாத வகையில், 8ஆவது சீசனுக்கு அதிக பார்வைகள் மற்றும் வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு விஜய் சேதுபதி முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கமல்ஹாசன் அடுத்த சீசனில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Similar News
News March 26, 2026
தேனி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 26, 2026
EPS-ன் Makeup முகத்துக்கு பின்னால் அமித்ஷா: சிவசங்கர்

திமுகவை விமர்சிக்கும் தகுதி EPS-க்கு இல்லை என SS சிவசங்கர் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருப்பதாக <<19478396>>EPS<<>> பேசியதை குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது; அதனால்தான் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது என தெரிவித்தார். மேலும், EPS மேக் அப் போட்டு அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு பின்னால் இருப்பது அமித்ஷா என்றும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
இந்திய கப்பல்களுக்கு தடை இல்லை: ஈரான் அமைச்சர்

இந்தியாவுக்காக ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்தே இருக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதியளித்துள்ளார். ஈரானுடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா, சீனா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான கப்பல்கள் தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கான எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 5 கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன.


