News December 23, 2024

‘இரட்டை இலை’ யாருக்கு? தீவிரமடையும் ECI விசாரணை

image

அதிமுக, இரட்டை இலை சின்னம் தொடர்பாக இபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஆஜரான சி.வி.சண்முகம் பொதுக்குழு முடிவுகளை எடுத்துரைத்தார். இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்பிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த 7 மனுக்கள் மீது இன்றும், நாளையும் ECI விசாரணை நடத்துகிறது. அனைத்து தரப்பு விசாரணைக்குப் பிறகு ‘இரட்டை இலை’ தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News September 10, 2025

மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
பொருள்:
பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். SHARE IT.

News September 10, 2025

BREAKING: கூட்டணியில் இணைகிறேன்.. TTV ட்விஸ்ட்

image

TTV, OPS மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார், அண்ணாமலை நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், NDA கூட்டணி முதல்வர் வேட்பாளரான EPS-ஐ மாற்றினால், கூட்டணியில் இணைவதாக TTV அறிவித்துள்ளார். இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத BJP தலைமை, செங்கோட்டையனை போல், தினகரனையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கான அசைன்மென்ட் அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

News September 10, 2025

செப்.12-ல் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

image

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் 3வது துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!