News October 29, 2025
யாரை காப்பாற்ற DMK அரசு துடிக்கிறது? அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் CBI விசாரணைக்கு ஐகோர்ட் ஆணையிட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் 2-வது முறையாக TN அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, யாரை காப்பாற்ற DMK அரசு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். TN காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையும் இழந்து வருவதாக கூறியுள்ள அவர், மனுவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 30, 2025
ராகுல் பேசும்போதெல்லாம் தாமரை மலர்ந்தது: அமித்ஷா

ஓட்டுக்காக PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு தேர்தலில், ராகுல் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் தாயாரை ராகுல் அவமதித்தார், பலமுறை இழிவான முறையில் பேசியுள்ளார் என்றும் கூறினார். ஆனால், ராகுல் இவ்வாறு இழிவாக பேசும் ஒவ்வொரு முறையும் தாமரை மலர்ந்துள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.
News October 30, 2025
Cinema Roundup: டிஸ்னியின் ‘zootopia 2’ தமிழில் ரிலீஸ்

*அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் மிருணாள் தாகூர் இணைந்துள்ளதாக தகவல். *டிஸ்னியின் ‘zootopia 2’ தமிழில் வரும் நவ.28-ம் தேதி ரிலீசாக உள்ளது. *‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடி இல்லையாம். *‘பியார் பிரேமா காதல்’ பட இயக்குநர் இயக்கி, நடிக்கும் படத்தில் ‘குடும்பஸ்தன்’ நாயகி நடிக்கிறாராம். *ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு ₹100 கோடி என தகவல்.
News October 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


