News March 1, 2025
யார் பெஸ்ட்? அஜித்- விஜய் ரசிகர்களிடையே மோதல்

அஜித் – விஜய் ரசிகர்களிடையே சோஷியல் மீடியாக்களில் சண்டை பற்றி எரிகிறது. நேற்று வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் முழுவதும் மாஸான சம்பவங்கள் இருந்தாலும், சின்ன வயது அஜித்தின் கெட்டப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையும், கோட் படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் உருவான சின்ன வயது விஜய்யும் ஒப்பிட்டு, யார் பெஸ்ட்? என இருவரின் ரசிகர்களும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
Similar News
News March 2, 2025
இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி, இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. வதோதராவில், முதலில் களமிறங்கிய SAM அணி 13.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் விளையாடிய INDM அணி, 11 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ராயுடு 41, நெகி 21, இர்ஃபான் பதான் 13, சச்சின் 6 ரன்கள் எடுத்தனர்.
News March 1, 2025
பாஸ்போர்ட்டுக்கு பிறப்பு சான்று கட்டாயம்: மத்திய அரசு

2023 அக். 1ஆம் தேதி, அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்று கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 1967 பாஸ்போர்ட் சட்ட 24ஆவது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதில் 2023 அக்டோபருக்கு முன்பு பிறந்தோருக்கு பிறப்பு சான்று கட்டாயமில்லை, அதன்பிறகு பிறந்தோருக்கு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.
News March 1, 2025
மின்சாரம் தாக்கி 4 பேர் பலி: ஸ்டாலின் இரங்கல்

<<15623438>>கன்னியாகுமரி<<>> அருகே மின்சாரம் தாக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மின்சாரம் தாக்கி, விஜயன், சோபன், மனு, ஜெஸ்டிஸ் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார். அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்ததோடு, CM பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.