News April 7, 2025
அந்த தியாகி யார்? பேட்ஜ் உடன் வந்த அதிமுக MLAக்கள்

சட்டப்பேரவைக்கு “அந்த தியாகி யார்” என்ற வாசகத்துடன் அதிமுக MLAக்கள் பேட்ஜ் அணிந்து வந்தனர். டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ED புகார் கூறியிருந்தது. இதை அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள அதிமுக, அந்த தியாகி யார்? என்ற புதிய முழக்கத்தை முன் வைக்க தொடங்கியுள்ளது. முன்னதாக அண்ணா பல்கலை., விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 23, 2025
இந்த மாத்திரை அதிகம் எடுக்குறீங்களா?கேன்சர் வரும்!

தொட்டதுக்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரையை சாப்பிடுற ஆளா நீங்க? ஆன்டிபயாடிக்கை அதிகமாக எடுத்தால் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். இதனால், குடல் ஆரோக்கியம் சீர்குலையும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், நாளடைவில் கேன்சர் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளுங்கள். பலரை கேன்சரில் இருந்து காக்கும், SHARE THIS.
News November 23, 2025
தவாகவில் இருந்து பாமகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகி!

தவாக மாநில இளைஞர் சங்க செயலாளர் ஆறுமுகம், அன்புமணி முன்னிலையில் பாமகவில் இணைந்தார். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தவாகவை வளர்க்க வேல்முருகனுடன் தீவிரமாக களப்பணியாற்றி வந்த நிலையில், திடீர் டிவிஸ்டாக பாமகவுக்கு தாவியுள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் பாமகவில் இணைந்துள்ளனர். பாமகவில் தந்தை – மகன் மோதலுக்கு நடுவே கட்சியை வலுப்படுத்த அன்புமணி தீவிரம் காட்டி வருகிறார்.
News November 23, 2025
தலை சுற்ற வைக்கும் அம்பானி பள்ளியின் கட்டணம்!

மும்பையில் இயங்கி வரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் வசூலிக்கப்படும் கட்டணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. *Kindergarten to 7th: ₹1.70 லட்சம். * 8 -10th (ICSE): ₹1.85 லட்சம். *8- 10th (IGCSE): ₹5.9 லட்சம். * 11 – 12th (IBDP): ₹9.65 லட்சம். ஷாருக்கான், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்களின் குழந்தைகள் இங்குதான் படிக்கின்றனர்.


