News April 7, 2025
இதில் யார் சொல்வது சரி?

தமிழகத்துக்கான சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், முதல்வர் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும், வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து ஆ.ராசா மூலம் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலையும் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 6, 2025
விஜய்யை சந்தித்தது தெரியாது: செல்வப்பெருந்தகை

காங்., நிர்வாகி <<18476742>>பிரவீன் சக்கரவர்த்தி<<>> விஜய்யை சந்தித்தது பேசுபொருளானது. இந்நிலையில், இந்த சந்திப்பு பற்றி தனக்கு தெரியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பேட்டியளித்த அவர், பிரவீன் சக்கரவர்த்தி பற்றி மேலிடத்தில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார். இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளதாக கூறிய அவர், திமுகவோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
News December 6, 2025
‘ஹாப்பி ராஜ்’ ஆக மாறிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹாப்பி ராஜ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் நிலையில், படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு, படத்தின் பெயரை அறிவித்துள்ளது.


