News September 3, 2025
மதுரை யாருக்கு? மூர்த்தி Vs பிடிஆர் இடையே பனிப்போர்

மதுரையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கும் அமைச்சர் மூர்த்திக்கு PTR முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேயர் இந்திராணியை மாற்றாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், திமுக தலைமை மதுரையிலுள்ள 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அசைன்மென்ட்டை மூர்த்தியிடம் கொடுத்திருக்கிறது.
Similar News
News March 5, 2026
புதுச்சேரியில் நிதியுதவி வழங்க அரசு உத்தரவு

புதுச்சேரியில் மகளிருக்கான மாதாந்திர நிதியுதவித் தொகை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கான தொகையை சேர்த்து மொத்தம் ரூ.5,000 வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
News March 5, 2026
மகளிருக்கு ₹7,000.. தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹5,000 ஏற்கெனவே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனையடுத்து, அரசு ஓய்வூதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ₹7,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், மகளிருக்கு மேலும் சில மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
News March 5, 2026
CM ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

505 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளைத்தான் திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது வெறும் 13% தான்; ஆனால் 98% நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பொய் சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் திமுகவிற்கு எதிராக வாக்களித்து தங்களுக்கு வெற்றியை கொடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.


