News September 13, 2025

யார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்?

image

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் (ITR) தாக்கல் செய்ய <<17699112>>இன்னும் 2 நாள்களே <<>>உள்ளன. இந்நிலையில், ₹12 லட்சம் வரை வருமானம் இருந்தால், வரி செலுத்த தேவையில்லை என்ற தவறான தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், 2025-26 நிதியாண்டு முதல் மட்டுமே இது பொருந்தும். இப்போதைக்கு ₹7 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் வரி செலுத்துவது அவசியம். அதேசமயம், 3 லட்சத்தை தாண்டினால் ITR தாக்கல் செய்வது கட்டாயம்.

Similar News

News September 13, 2025

குறட்டை வராமல் தடுப்பது எப்படி?

image

தூங்கும்போது நமது நாக்கு தொண்டை பகுதியில் சிக்கிக் கொள்வதால் குறட்டை வருவதாக கூறப்படுகிறது. அதனை தவிர்க்க வழிகள் உள்ளன. தலையை சற்று உயர்த்தி படுக்க 2 தலையணை பயன்படுத்துங்கள். மது, சிகரெட் பழக்கமுள்ளவர்கள் அதனை குறையுங்கள். உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். நேராக படுக்காமல், இடது (அ) வலது புறம் திரும்பி படுங்கள். குறட்டை விடும் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

மக்கள் மீது சுமையை மட்டுமே திமுக ஏற்றியுள்ளது: EPS

image

திமுக ஆட்சிக்கு வந்ததும் குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என அனைத்தையும் உயர்த்தி, மக்களின் சுமையை அதிகரித்துவிட்டதாக EPS குற்றம்சாட்டினார். அதிமுகவின் திட்டங்களை நிறுத்திய ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்றும், குடும்பத்தின் நலன்களை மட்டும் அவர் சிந்திப்பார் எனவும் EPS விமர்சித்தார். தேர்தல் அறிக்கையில் சொல்லிய பலவற்றை நிறைவேற்றாமல், இப்போது வெற்று நாடகத்தை திமுக போடுவதாகவும் சாடினார்.

News September 13, 2025

கல்லீரலை காக்க… இதை கவனியுங்க

image

உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரையை தவிருங்கள் *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்கள் *வலிநிவாரணி மாத்திரைகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட் உணவை தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும்.

error: Content is protected !!