News April 24, 2024
யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு கிடைக்கும்?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவற்ற குழந்தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தே மற்றவர்களுக்கு வழங்கப்படும்.
Similar News
News January 2, 2026
1 கிலோ மாட்டு சாணம் ₹11,000!

NZ-ன் ஆக்லாந்தில் Navafresh என்ற இந்திய கடையில் விற்கப்படும் மாட்டு கோமியம் & சாணத்தின் விலை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2 லிட்டர் கோமியம் $NZ253-க்கும்(₹13,000), 1 கிலோ சாணம் $NZ220-க்கும் (₹11,000)விற்கப்படுகிறதாம். இதில் மேலும் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால், சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பேபி பவுடர் $NZ214 (கிட்டத்தட்ட ₹13,100) வரைக்கும் விற்கப்படுகிறது. என்னவென்று சொல்ல!
News January 2, 2026
தங்கம் + வெள்ளி: ஒரே நாளில் ₹5,000 உயர்ந்தது

தங்கம் <<18738095>>சவரனுக்கு ₹1,120 <<>>உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (ஜன.2) ஒரு கிராம் வெள்ளி விலை ₹4 உயர்ந்து ₹260-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 28-ம் தேதிக்கு பிறகு வெள்ளி விலை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News January 2, 2026
₹25,000 சம்பளம்.. மத்திய அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் உள்ளிட்ட 394 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, B.Sc., வயது வரம்பு: 18 – 26. சம்பளம்: ₹25,000 – ₹1,05,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.9. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


