News August 10, 2024
யார் யாருக்கு மாதம் ₹1000 உதவித்தொகை?

‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவப் படிப்பு, சட்டம் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம். 8, 10ஆம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி படிப்பவர்களும் இதன் மூலம் பயன்பெறலாம்.
Similar News
News November 24, 2025
காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 24, 2025
BREAKING: 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புதிதாக திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
PM மோடி நாடு திரும்புகிறார்

தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. அதில் கலந்து கொள்ள சென்ற PM மோடி இன்று நாடு திரும்புகிறார். இது குறித்து அவர் தனது X பதிவில், உச்சிமாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இதில் பல நாட்டு தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 2 நாள்கள் நடைபெற்ற <<18364418>>ஜி20 மாநாட்டில்<<>> ஆக்கிரமிப்பு, பொருளாதரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


