News April 11, 2025

ருதுராஜ்க்கு பதிலாக இன்று யார் விளையாடலாம்?

image

இந்த ஆண்டு IPL தொடரில், CSK அணி சரியான பேட்டிங் ஆர்டரை செலக்ட் பண்ண முடியாமல், தொடர்ந்து தடுமாறி வருகிறது. தற்போது ருதுராஜும் இல்லாத சூழலில், அவருக்கு பதிலாக 2வது விக்கெட்டிற்கு யாரை களமிறக்கும் CSK என்பதே பெரிய கேள்வி. ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டும் தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி ஆகியோர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்று பிளேயிங் XIல் யார் யார் இருப்பாங்க?

Similar News

News April 18, 2025

3 நாட்களில் ரூ.18.42 லட்சம் கோடி அள்ளிய முதலீட்டாளர்கள்

image

மும்பை பங்குச்சந்தையில் கடந்த 3 நாட்களில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக, நேற்று மட்டும் ஒரே நாளில் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வை சந்தித்தன. இந்த 3 நாள் உயர்வால், மும்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு ரூ.18.42 லட்சம் கோடி கிடைத்தது. அதேபோல், மும்பை பங்குச்சந்தையின் முதலீடு மதிப்பு ரூ.419.60 லட்சம் கோடியாக அதிகரித்தது.

News April 18, 2025

காேயில் பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம்

image

தற்போது தமிழகம் முழுவதும் நகரங்களில் இயக்கப்படும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி தர வேண்டுமென அண்மையில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிர்வாகத்தால் இயக்கப்படும் பஸ்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகள் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.

News April 18, 2025

விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள்: சீமான்

image

நாம் தமிழர் கட்சியில் தான் சொல்வதை கேட்காதவர்கள் விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள் என்று சீமான் காட்டமாக பேசியிருக்கிறார். கட்சியினர் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் நான் சொல்பவர்கள்தான் வேட்பாளர்கள், அதனை மீறி யாராவது போட்டியிட நினைத்தால், விஜய் கட்சிக்கு சென்றுவிடுங்கள் என்று கூறினார். சீமானின் இப்பேச்சு குறித்த உங்களது கருத்து என்ன?

error: Content is protected !!