News March 25, 2025
உங்களின் ‘ஐந்து பேர்’ யார்?

நீங்கள் எந்த ஐந்து பேருடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறீர்களோ, அந்த ஐந்து பேரின் சராசரியாகத்தான் நீங்கள் விளங்குவீர்கள் என்ற ஒரு வாக்கியம் உண்டு. நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் நம் எண்ணத்தை தீர்மானிக்கிறார்கள். உத்வேகம் தரும் நபர்களை கண்டறியுங்கள். வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகும் மனிதர்களுடன் நீங்கள் இருந்தால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அப்படியானவர் உங்களுக்கு இருக்கிறாரா?
Similar News
News March 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 29, 2025
இ(பி)றந்த குழந்தைக்கு வந்தது உயிர்…அதிசயமா? அலட்சியமா?

அரசு சுகாதார மையத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் ஹாஸ்பிடலில் உயிர்பிழைத்த சம்பவம் பிஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா – ஜோதி குமாரி தம்பதிக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு டாக்டர் கூறியுள்ளார். பின்னர், தனியார் ஹாஸ்பிடலில் ஆக்சிஜன் செலுத்தியபோது குழந்தை அழத் தொடங்கி இருக்கிறது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 29, 2025
சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி…!

சேப்பாக்கத்தில் CSK அணியை வென்று 17 ஆண்டுகால சோக வரலாற்றுக்கு RCB முடிவு கட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த RCB அணியில், கேப்டன் ரஜத் பட்டிதார் அரைசதம் விளாசினார். 20 ஓவர்களில் அந்த அணி 196 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய CSK அணியில், கேப்டன் ருதுராஜ் டக் அவுட் ஆனார். இறுதிவரை போராடியும் CSK அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 2008-க்கு பிறகு சேப்பாக்கத்தில் ஆர்சிபி வென்றுள்ளது.