News August 24, 2025
ஒரே தொடர் 1000+ பந்துகள் வீசிய பவுலர்கள் யார்?

டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் 1000 பந்துகளுக்கு மேல்(சராசரியாக 167 ஓவர்கள்) வீசுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்கு கடுமையான உடல் வலிமையையும், மனவலிமையையும் தேவைப்படும். உலகளவில் சில பந்துவீச்சாளர்கள் இதனை பலமுறை நிகழ்த்தியுள்ளார்கள். இந்தியாவிலும் சில வீரர்கள் இதனை செய்துள்ளனர். அவர்கள் யார் என்பதை மேலே கொடுத்துள்ளோம் SWIPE செய்து பார்க்கவும்.
Similar News
News August 24, 2025
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இன்று காலை 10 மணியில் இருந்து Airtel நெட்வொர்க் சேவை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுமார் 7,000 பேர் X உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள், ஏர்டெல் சேவை மையங்களில் புகாரளித்து வருகின்றனர். இதனையடுத்து, சேவையை மீட்டெடுக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரமும் சில இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டது.
News August 24, 2025
அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா

சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு, தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை என்று மத்திய பாஜக அரசை ஆ.ராசா விமர்சித்துள்ளார். தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை என சாடிய அவர், இந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் எனப் பேசக் கொஞ்சமும் வெட்கமில்லையா அமித்ஷா அவர்களே! என்று கொந்தளித்துள்ளார்.
News August 24, 2025
நேற்று ஆதரவு.. இன்று விஜய்க்கு எதிர்ப்பு.. என்ன நடந்தது?

நேற்று வரை விஜய்யை எங்க வீட்டு பிள்ளை; எங்கள் தம்பி என்று அழைத்து வந்த பிரேமலதா, இன்று விமர்சிக்க தொடங்கி இருக்கிறார். வாக்கை பிரிப்பதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினாரா என கேள்வி எழுந்தது. இதுகுறித்து பிரேமலதா, எங்களுக்கென தனி இயக்கம் இருக்கிறது. எங்கள் கட்சியில் வாரிசுகள் இருக்கிறார்கள், கேப்டன் பெயரை வேறொருவர் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.