News August 8, 2024
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு, வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News November 6, 2025
பெண்களின் குளியல் வீடியோ.. அரசுக்கு அன்புமணி கண்டனம்

ஓசூர் விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை தமிழக அரசு பாதுகாக்க தவறிவிட்டதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் கைதான பெண்ணின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று X-ல் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பெண் தொழிலாளிகளின் காணொலி SM-ல் பரவியிருந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை தேவை என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
News November 6, 2025
‘AK65’ அஜித்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

AK65 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் சொன்ன கதைக்கு அஜித் ஓகே சொல்லியதாகவும், இதையடுத்து அவர் கதை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனுடனான AK64 படத்தை விரைவில் முடித்துவிட்டு, லோகியுடன் இணைந்து அஜித் பணியாற்ற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த காம்போவுக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
News November 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 511 ▶குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். ▶பொருள்: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.


