News May 8, 2025

விஸ்கி விலை குறைகிறது.. இனி மதுபிரியர்களுக்கு ஜாலி

image

இந்தியாவுக்கு விஸ்கியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக இங்கிலாந்து உள்ளது. இந்நிலையில், அந்நாட்டுடன் இந்தியா அண்மையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி ஆகும் மதுபானங்கள் மீதான வரி 75%ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அந்நாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் ஸ்காட்ச், ஜின் விலை குறைகிறது. இதேபோல் விஸ்கியும் விலையும் கணிசமாக குறையவுள்ளது.

Similar News

News December 26, 2025

மத அரசியலை பாஜக செய்யவில்லை: அண்ணாமலை

image

மத உணர்வுகளால் அரசியல் செய்யும் பாஜக தமிழகத்தில் வர முடியாது என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், மத அரசியல் செய்வது பாஜக இல்லை என அண்ணாமலை பதிலளித்துள்ளார். கிறிஸ்துமஸுக்கு சர்ச், ஈத்-க்கு வாழ்த்து, தீபாவளி கொண்டாட்டம் என PM மோடி இருக்கிறார். கிறிஸ்துமஸ், ஈத்-க்கு முதல் ஆளாக செல்வேன், ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து கூற மாட்டேன் என்பது மத அரசியல் இல்லையா என கேள்வி எழுப்பினார்.

News December 26, 2025

கர்ப்பமானது தெரியாமலே குழந்தை பெற்ற பெண்!

image

US-ல் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தது, தெரியாமலேயே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். லோபஸ் (41) என்பவருக்கு கருப்பையில் கரு வளராமல், கல்லீரல் அருகில் வளர்ந்துள்ளது. இதனால், மாதவிடாய் உள்ளிட்ட அனைத்தும் சாதாரணமாக இருந்துள்ளது. 30,000 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய அரிய கருத்தரிப்பு நடைபெறும், 10 லட்சம் பேரில் ஒருவருக்கே கரு முழுவளர்ச்சி அடையும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

News December 26, 2025

உதவிக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

image

தான்சானியாவில் உள்ள புகழ்பெற்ற கிளிமாஞ்சாரோ சிகரம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால், மருத்துவ அவசர உதவிக்காக நோயாளிகளை ஏற்றிச் சென்றபோது தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பைலட், டாக்டர், வழிகாட்டி & 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை உள்ளூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

error: Content is protected !!