News February 1, 2025
பெண் வடிவத்தில் அனுமன் இருக்கும் கோயில்?

சத்தீஸ்கரின் ரத்தன்பூர் மாவட்டத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது ரத்தன்பூர் மன்னர் பிருத்வி தேவ்ஜுவால் கட்டப்பட்டது. மன்னரின் கனவில் தோன்றிய அனுமன், அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் இருக்கும் சிலையை எடுத்து வந்து கோயிலை கட்டி பிரதிஷ்டை செய்து வழிபடும் படி கூறினாராம். அங்கு பெண் வடிவிலான சிலை கிடைத்த போதிலும், மன்னர் கோயிலை கட்டியுள்ளார். அப்படி தான் ‘மாதா அனுமன்’ தோன்றியதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 19, 2026
பத்திரிகையாளர்களுக்கும் தபால் வாக்கு: ECI

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு (ஏப்.23) 15 நாள்களுக்கு முன்பே பூத் நிலை அலுவலர்கள் (BLO) மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம் என ECI தெரிவித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களும் தபால் வாக்கு செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தபாலில் வாக்களிப்போர் தபால் செலவை ஏற்க வேண்டிய தேவையில்லை என்றும் ECI தெரிவித்துள்ளது.
News March 19, 2026
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. மக்கள் மகிழ்ச்சி

பிப்ரவரியில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை மார்ச்சில் தலைகீழாக மாறியுள்ளது. ஏற்கெனவே சவரனுக்கு <<19426387>>₹15,000 குறைந்துள்ள<<>> நிலையில், மேலும் ₹4,000 வரை குறையக்கூடும் என நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் பக்கம் முதலீட்டாளர்கள் கவனம் சென்றதே தங்கம் விலை குறைய காரணமாம். போர் முடிந்தபின், தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாம்.
News March 19, 2026
அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

அதிமுக கூட்டணி ஏறக்குறைய இறுதியாகிவிட்ட நிலையில், கடைசிநேரத்தில் புதிதாக ஒரு கட்சி இணைந்துள்ளது. மாவீரன் கட்டபொம்மன் பேரவையின் தலைவர் PV ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் EPS-ஐ சந்தித்தனர். இதையடுத்து, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவை அளிப்பதாக PV ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கூட்டணியில் இணைந்த அவருக்கு, EPS நன்றி தெரிவித்துக் கொண்டார்.


