News March 28, 2025
பிளே ஆப் செல்லும் அணிகள் எவை? இர்பான் கணிப்பு

ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.
Similar News
News December 20, 2025
டி20-ல் வீழ்த்த முடியாத அணியாக மாறிய இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியதோடு சேர்ந்து 8 தொடர்களை(Bilateral) இந்தியா தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது. மேலும் கடந்த 2023-ல் இருந்து பார்த்தால் ஆசிய விளையாட்டு போட்டி, 2024 டி20 WC, 2025 ஆசிய கோப்பை என இந்தியா களம் கண்ட அனைத்து பெரிய தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் டி20 போட்டிகளில் அசைக்க முடியாது வலுவான அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
News December 20, 2025
ஒபாமா ஃபேவரைட் லிஸ்ட்டில் தமிழ் வம்சாவளியின் பாடல்

2025-ல் தனக்கு பிடித்த பாடல்களின் லிஸ்ட்டை பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார். அதில் ‘Pasayadan’ என்ற மராத்தி பாடலும் இடம்பெற்றுள்ளது. இதனை இந்திய – அமெரிக்க இசைக்கலைஞரான கானவ்யா (Ganavya) பாடியுள்ளார். கானவ்யா ஐயர் துரைசுவாமி என்ற இவர், தமிழகத்தில் பிறந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். கர்நாடக இசை & பரதநாட்டியத்திலும் கற்றுத் தேர்ந்த இவர், Onnu, Nilam ஆகிய ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார்.
News December 20, 2025
வரலாற்றில் இன்று

*1844 – இலங்கையில் அடிமை முறையை ஒழிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. *1952 – அமெரிக்க வான்படை விமானம் வெடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர். *1987 – பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1,749 பேர் உயிரிழந்தனர். *2007 – ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக அதிக காலம் இருந்த பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
*1994 – நடிகை நஸ்ரியா பிறந்தநாள்


