News July 24, 2024
அரையிறுதிக்கு செல்வது எந்த அணி?

ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ‘பி’ பிரிவில் இலங்கை, தாய்லாந்து முதல் இரு இடங்களில் உள்ள நிலையில், இன்று அவ்விரு அணிகளும் தங்கள் கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. இதில் இலங்கை தோற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. மற்றொரு போட்டியில் வங்கதேசம், மலேசியா அணிகள் மோதுகின்றன.
Similar News
News March 3, 2026
மதுரை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
தொகுதிக்குள் லாரிலாரியாக பரிசை இறக்கும் SP வேலுமணி

தனது கோட்டையாக உள்ள கோவையில் மீண்டும் வெற்றி வாகை சூட வேண்டும் என ’வாரி வழங்கும்’ வேலைகளில் அதிமுக இறங்கியுள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் பரிசுகளை அதிமுக இறக்கியது. அதன் தொடர்ச்சியாக தனது தொகுதியில் 25,000 ஓட்டுகள் உள்ள SC, ST மக்களுக்கு லாரிகளில் கொண்டுவந்த 200 லி டிரம்களை விநியோகித்து வருகிறாராம் SP வேலுமணி. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 3, 2026
BREAKING: தங்கம் விலை ஒரேநாளில் ₹1,560 குறைந்தது

போர் பதற்றம் அதிகரித்த போதிலும், தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,560 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹80 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,480 சரிந்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,465-க்கும், 1 சவரன் ₹1,23,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிலோ 3.15 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.


