News March 28, 2024
அந்த சாதனையை எந்த அணி முறியடிக்கும்!

MI அணிக்கு எதிரான போட்டியில் SRH அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி RCB அணியின் சாதனையை முறியடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் அதிக (263) மற்றும் குறைந்த (49) ரன்கள் எடுத்த இருவேறு சாதனைகளை RCB அணி படைத்துள்ள நிலையில், இன்று SRH அதிகபட்ச ரன்களுக்கான (277) சாதனையை முறியடித்தது. RCB இன் குறைந்த ரன் சாதனையை எந்த அணி முறியடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
Similar News
News October 20, 2025
தமிழக மீனவர்களுக்காக பாஜக நிற்கும்: நிர்மலா சீதாராமன்

PM மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தமிழக மீனவர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். கடலில் சிக்கித் தவிக்கும் குமரி வல்லவிளையை சேர்ந்த மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தமிழக மீனவர்களின் நலனுக்காக பாஜக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 20, 2025
Mass-ஆக தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

எப்படா வருவாரு என காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். ஆண்டுதோறும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு, ரசிகர்கள் திரண்டு தீபாவளி வாழ்த்து பெற்று செல்வார்கள். இந்த ஆண்டும் காலை முதலே அவரது வீட்டு வாசலில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. வெயிட்டிங்கில் இருந்த ரசிகர்கள் முன் Mass-ஆக வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார்.
News October 20, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தீபாவளி நாளான இன்று(அக்.20) தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,920-க்கும், சவரன் ₹95,360-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹190-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,90,000-க்கும் விற்பனையாகிறது.