News March 24, 2025
முதலில் வந்தது ஆணா? பெண்ணா? MP சர்ச்சை கருத்து

வழக்கமாக ஒரு விஷயத்தில் முதல் முயற்சி தவறாகவே முடியும் என்பதால், கடவுள் முதலில் ஆண்களை தான் படைத்திருப்பார் என சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு அவர் இப்பதிலை கூறியுள்ளார். மேலும் 2வது முறை, கடவுள் பெண்களைப் படைத்து, அவர்களுக்குத் தேவையான திறனை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?
Similar News
News November 20, 2025
கோவை: அமீபா பாதிப்பு.. தாமதிக்க வேண்டாம்!

கேரளாவில் அதிகரித்து வரும் அமீபா பாதிப்பு கோவையில் இல்லையெனினும், பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், “இந்த பாதிப்பு கோவையில் பதிவாகவில்லை. தனிப்பட்ட எச்சரிக்கை ஏதும் கொடுக்கவில்லை. எனினும் கண்காணித்து வருகிறோம். காய்ச்சலுடன் ‘ஆல்டர் சென்சார் அமீபா’ எனும் மனம் குழம்பிய நிலை இருந்தால், தாமதிக்காமல் மருத்துவமனை அழைத்து வரவேண்டும்” என்றார்.
News November 20, 2025
சிறப்பு TET தேர்வு அறிவிப்பு வாபஸ்

SC உத்தரவு படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு 2026 ஜனவரியில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பை தனது இணையதளத்தில் இருந்து நீக்கி, TRB வாபஸ் பெற்றுள்ளது. அறிவிப்பில் சில தவறுகள் உள்ளதாகவும், அவை களையப்பட்டு, விரைவில் <<18329505>>TET<<>> தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் TRB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 20, 2025
பார்வையால் நெஞ்சை கிள்ளும் ஸ்ரேயா (PHOTOS)

பெண் ஓவியமாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்திழுத்த நடிகை ஸ்ரேயா, கடைசியாக ‘ரெட்ரோ’ படத்தின் ‘Love Detox’ பாடலில் நடனமாடியிருந்தார். இந்நிலையில், வெள்ளை நிற சேலையில் சிற்பி வடித்த சிலை போல் காட்சியளிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை ஹார்ட்டின்களை பறக்க வைத்துள்ளார். ஸ்ரேயா நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் எது?


