News April 25, 2025

தமிழகத்தின் பசுமை நகரம் எது?.. ஏன் தெரியுமா?

image

தமிழகத்தின் பசுமை நகரமாக கோவை திகழ்கிறது. இந்திய பசுமை கட்டிட கவுன்சில் நடத்திய ஆய்வில் போக்குவரத்து, கழிவுநீர் மேலாண்மை உள்பட பல தரவுகளின் அடிப்படையில் இம்முடிவு வெளியாகியுள்ளது. நடப்பாண்டில் 1 லட்சம் மரக்கன்று நடுதல், ஒரு நாளைக்கு ஒருவருக்கு 125 லிட்டர் தண்ணீர், 1.25 லட்சம் பாதாளச் சாக்கடை இணைப்பு ஆகியவை நகரின் பசுமை தரத்திற்கு காரணமாகும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்

Similar News

News April 25, 2025

11-ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வு.. கருணை மதிப்பெண்

image

11-ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24-வது கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருப்பதாகவும், ஆதலால் அந்தக் கேள்விக்கு சரியாகவோ, தவறாகவோ எந்தப் பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதாெடர்பாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

News April 25, 2025

பஹல்காம் எதிரொலி: CM-களுக்கு அமித் ஷாவின் உத்தரவு!

image

நாட்டில் இருக்கும் அனைத்து CM-களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மாநிலத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 200 பேர் இருப்பதாக முன்னரே தகவல் வெளிவந்திருந்தது.

News April 25, 2025

மோடி உங்களை தூங்க வைப்பார்; பாஜக தலைவர்

image

மோடி எதுவும் செய்ய மாட்டார், பிஹார் சென்று உரை நிகழ்த்துவதற்குப் பதிலாக அவர் காஷ்மீருக்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது நாம் நம்பிக்கை இழந்து வீட்டிற்குச் செல்வோம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விஷயம் முடிந்துவிட்டது. மோடி, ‘அங்கு எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லி உங்களைத் தூங்க வைப்பார் எனவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!