News April 15, 2024
உலகின் பரபரப்பான விமான நிலையம் எது?

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் டெல்லி விமான நிலையம் 10ஆவது இடம் பிடித்துள்ளது. ஏசிஐ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களில் 5 அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் 2023இல் 10.46 கோடி பயணிகளைக் கையாண்டு முதல் இடம் பிடித்துள்ளது. துபாய் விமான நிலையம் 8.69 கோடி பயணிகளைக் கையாண்டு 2ஆவது இடம் பிடித்துள்ளது.
Similar News
News November 27, 2025
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துகிறதா இந்தியா?

<<18371900>>ஷேக் ஹசீனாவை<<>> நாடு கடத்துவது தொடர்பாக, வங்கதேசத்தின் கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதி விவகாரங்கள், சட்ட செயல்முறைகளின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளது. மேலும், வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மேம்பட இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News November 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News November 27, 2025
‘ஜெயிலர் 2’ இணைந்த மிரட்டலான வில்லன்

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் நிலையில், மற்றொரு வில்லன் ரோலுக்கு விஜய் சேதுபதியை நெல்சன் அணுகியதாக கூறப்படுகிறது. அதற்கு அவரும் ஓகே சொல்லவே, முக்கியமான காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டு வருகிறது. ‘பேட்ட’ படத்தில் ரஜினி, VJS இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


