News April 17, 2025

PSL-ல, IPL-ல எது பெஸ்ட்? – தெளிவான பதில்

image

PSL-லில் Lahore Qalandars அணிக்காக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் விளையாடி வருகிறார். அவரிடம் IPL மற்றும் PSL இரண்டிலும் விளையாடியுள்ளீர்கள், இதில் எது சிறந்த லீக் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு IPL-லை மற்ற லீக்குகளுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அனைத்துமே IPL-லுக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News

News April 19, 2025

உலக கல்லீரல் தினம்: இன்றே மது, புகையை விடுங்க

image

வாகனங்களுக்கு எஞ்சின் போல மனிதனுக்கு கல்லீரல். அது நன்றாக இயங்கினால் தான் மனிதன் நோய் நொடி இல்லாமல், மகிழ்ச்சியாக வாழ முடியும். கல்லீரலை பாதுகாக்க போதுமான தூக்கம், உடற்பயிற்சி, மது அருந்தாமல் இருப்பது மற்றும் நச்சுப் பொருட்கள் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அவசியம். கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் பூண்டு, வெங்காயம், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

News April 19, 2025

கிராம உதவியாளர்களுக்கு குரல் கொடுத்த ஓபிஎஸ்

image

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களை போல காலமுறை ஊதியம் வழங்கப்படாததால் கிராம உதவியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு கால முறை ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News April 19, 2025

வரலாற்றில் இன்று!

image

➤உலக கல்லீரல் தினம்
➤1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
➤1975 – இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
➤1957 – முகேஷ் அம்பானி பிறந்தநாள்.
➤போலந்தில் பெரும் இன அழிப்பு நினைவு நாள்.

error: Content is protected !!