News October 24, 2025
எடையை குறைக்க எது பெஸ்ட்.. ஓடுவது அல்லது நடப்பது?

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி பெஸ்ட்டா? ஓடுவது பெஸ்ட்டா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். உடலை ஃபிட்டாக பராமரிக்க விரும்புவோர் நடைபயிற்சி செய்யலாம். ஒரு நாளைக்கு 2 கி.மீ தூரம் நடப்பது high BP மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும். அதே நேரத்தில், உடல் எடையை குறைக்க ஓடுவதுதான் பெஸ்ட். இது அதிக கலோரிகளை எரிப்பதுடன், உடல் ஆற்றலையும் மேம்படுத்துகிறது. நீங்க என்ன பண்ணுவீங்க?
Similar News
News October 24, 2025
கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது: HC

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்ட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் கட்டுமானத்துக்கு தடை விதிக்க மறுத்த HC, பக்தர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் கட்டங்களை பயன்படுத்த உத்தரவிட்டது. மேலும் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என TN முழுவதும் உள்ள கோயில்களுக்கும் அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டது.
News October 24, 2025
அதிக பாலோயர்ஸ் கொண்ட நடிகைகள்

திரையுலகில் நடிப்பால் மக்களின் மனதை கவரும் நடிகைகள், இன்ஸ்டாவில் தங்களது போட்டோஷூட், ஃபேஷன் லுக்குகள், உடற்பயிற்சி வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து இன்னும் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளனர். எந்த தென்னிந்திய நடிகை, எவ்வளவு பாலோயர்ஸ் வைத்துள்ளார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. யாருக்கு அதிக பாலோயர்ஸ்? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
கட்சிக்கு கெடு விதிக்கவில்லை: செங்கோட்டையன் விளக்கம்

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க கட்சி தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து, அமைதி காத்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை என்றும் 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றே கூறியதாகவும் அவர் புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.


