News October 6, 2025
எந்த கிழமையில் எந்த கடவுளை வழிபட வேண்டும்?

கடவுளை வழிபட நேரம், காலம் இல்லை என்ற போதிலும், ஒரு சில நாள்கள் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த தினமாகும். ஞாயிறன்று சூரிய பகவானை வழிபட வேண்டும். திங்களன்று சிவனையும், செவ்வாயில் முருகன், துர்கை அம்மன் வழிபாடுகளை செய்யலாம். புதனில் விஷ்ணு, விநாயகரையும், வியாழக்கிழமையில் தட்சணாமூர்த்தியை வணங்க வேண்டும். வெள்ளியில் மகாலட்சுமி வழிபாடும், சனிக்கிழமையில் அனுமன், பெருமாளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். SHARE.
Similar News
News October 6, 2025
கரூர் செல்கிறார் கமல்ஹாசன்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை கமல்ஹாசன் MP இன்று நேரில் சந்திக்க உள்ளார். ஏற்கெனவே கரூர் சம்பவம் பேரதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்ததாக X-ல் கமல் இரங்கல் தெரிவித்திருந்தார். ஆல்பெர்டா இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க அவர் கனடா சென்றிருந்த நிலையில், நாடு திரும்பிய கையோடு கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க செல்கிறார்.
News October 6, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மருதாணி இலையை அரைத்து பசையாக வைத்தால், கால் எரிச்சல் அடங்கும் *மருதாணியுடன் வசம்பு, மஞ்சள், கற்பூரத்தை அரைத்து, உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் கட்டினால் குணமாகும் *கிருமி நாசினி என்பதால், மருதாணி இட்டுக் கொள்வதால் நகச்சுத்தி வராது *மருதாணியை அரைத்து நீரில் கரைத்து, வடிகட்டி அந்த நீரில் வாய்க் கொப்பளித்தால், வாய்ப்புண் தொல்லை நீங்கும். SHARE IT.
News October 6, 2025
திமுகவை டிடிவி பாராட்டுவது பச்சை துரோகம்: RB உதயகுமார்

டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 MLA-க்கள் இன்று அரசியல் அநாதையாகிவிட்டனர் என Ex அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். உங்களின் தளபதியாக இருந்தவர்கள் இப்போது ஸ்டாலினுக்கு தளபதியாக மாறியது ஏன் என டிடிவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் கொடியை வைத்துக் கொண்டு <<17919640>>திமுகவை பாராட்டுவது<<>> பச்சை துரோகம் என்றும் உதயகுமார் சாடியுள்ளார்.