News March 22, 2024

குல தெய்வம் தெரியாதோர் எந்த கடவுளை வழிபடுவது?

image

தமிழ்நாட்டு மக்களுக்கு குல தெய்வ வழிபாடு மிக முக்கியமானதாகும். வேலை நிமித்தமாக பலர் இடம்பெயர்வதாலும், சரிவர விவரம் தெரியாததாலும், சிலருக்கு தங்களது குல தெய்வம் எது என்பது தெரியாமல் இருக்கும். அதுபோல குழப்பத்தில் இருப்போர் கவலைப்பட வேண்டாம். தமிழர்களின் கடவுளான முருகனை வழிபட்டால், குல தெய்வத்தை வழிபட்டதற்கான அனைத்து பலன்களும் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.

Similar News

News October 23, 2025

அக்.28-ல் தமிழகம் வரும் துணை ஜனாதிபதி

image

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக, வரும் 28-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து வரும் 29-ம் தேதி தான் பிறந்த ஊரான திருப்பூருக்கு செல்லும் நிலையில், அவரது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் CPR, தனது சொந்த ஊருக்கு முதல் முறையாக செல்கிறார்.

News October 23, 2025

நிவாரணம் பற்றி பேச EPS-க்கு அருகதை இல்லை: சேகர்பாபு

image

மழை நிவாரண பணிகள் குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், ஆளும்கட்சியாக இருந்தபோது கால்கூட தரையில் படாமல்தான் EPS பணியாற்றினார் என விமர்சித்தார். மேலும், கொரோனா காலத்தில் கூட உயிரை துச்சமென நினைத்து களத்தில் பணியாற்றியது அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்றார்.

News October 23, 2025

மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் தீருநீற்றுபச்சிலை!

image

➤இதன் 4 இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி நீங்கிவிடும். ➤வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க, ஒரு கைப்பிடி பச்சிலை இலைகளைப் பறித்து நீரில் நன்கு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நறுமணமாக இருக்கும். ➤காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலையின் சாற்றை, சில சொட்டுகள் விட்டால் வலி நீங்கும். ➤வாயுத்தொல்லை இருப்பவர்கள், இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்னை சரியாகும்.

error: Content is protected !!