News October 2, 2025
நவம்பர் மாதம் எந்த ஊருக்கு போகலாம்?

நவம்பர் மாதம் தென்னிந்திய மலைநகரங்களுக்கு செல்ல சிறந்த காலமாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கனமழை காலம் முடிந்து, மலைப்பகுதிகள் பசுமையாய் மாறியிருக்கும். மிதமான குளிர்ச்சி இருக்கும். டிசம்பர் விடுமுறை கூட்டம் வருவதற்கு முன், கூட்டம் குறைவாக இருக்கும். நவம்பர் மாதம் செல்ல வேண்டிய மலை நகரங்களின் போட்டோஸ் மேலே கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. நீங்க எங்க போறீங்க? சொல்லுங்க.
Similar News
News October 2, 2025
Windows 10 சகாப்தம் முடிந்தது

Windows 10 OS-க்கான செக்யூரிட்டி அப்டேட் வரும் 14-ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அப்டேட்ஸ் இல்லையென்றாலும், வழக்கம் போல் அதை பயன்படுத்தலாம் எனவும், இருப்பினும் எளிதில் வைரஸ் உள்ளிட்ட சைபர் தாக்குதல்களுக்கு அது உள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளது. இதை தவிர்க்க விரும்புபவர்கள் Windows 11-க்கு அப்டேட் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
தீபாவளி பரிசாக ₹2,000.. வந்தாச்சு புது அப்டேட்!

PM KISAN <<17856963>>21-வது தவணை ₹2,000-<<>>ஐ தீபாவளிக்கு முன்பே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 2019 பிப்.1-க்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகள் மற்றும் ஒரே குடும்பத்தில் பல பயனாளிகள் இருந்தால், வெரிபிகேஷன் முடியும் வரை அவர்களுக்கு பணம் கிடைக்காது. PM KISAN வலைதளம் (அ) செயலியில் ‘Know Your Status’ சென்று, தகுதி நிலையை சரிபார்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.
News October 2, 2025
பாடகர் மரணம்… மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

சிங்கப்பூர் சென்ற பிரபல <<17805002>>பாடகர் ஜுபின்<<>> கார்க், அங்கு மரணடைந்தது குறித்து, அவரது மனைவி கரிமா சந்தேகங்கள் எழுப்பியுள்ளார். நீச்சல் மற்றும் பிக்னிக்கிற்கு அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மேனேஜர் அருகில் இருந்தும் அவர் உயிரிழக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்கூபா டைவிங்கில் அவர் இறக்கவில்லை, விசாரணையில் உண்மை வெளியில் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.