News December 2, 2024
புயல் தற்போது எங்கு உள்ளது?

நவம்பர் 30ஆம் தேதி இரவு கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து கள்ளக்குறிச்சிக்கும் சங்கராபுரத்துக்கும் இடையே மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக தி.மலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News August 22, 2025
சுபான்ஷு சுக்லாவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

சர்வதேச விண்வெளி மையம் சென்று ஆராய்ச்சி பணிகள் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இதுகுறித்து X பக்கத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ககன்யான் திட்டம், சுக்லாவின் விண்வெளி பயணம், விண்வெளியில் அவர் மேற்கொண்ட முக்கிய சோதனைகள் குறித்து விவாதித்தாகவும், அவரது சாதனைகளால் தேசம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
‘அணில்கள் இல்லை சிங்கம்’: சீமானுக்கு விஜய் பதிலடி?

TVK 2-வது மாநாட்டில் பேசிய விஜய், ‘சிங்கம் வேட்டைக்கு தான் வெளியே வரும்’, ‘சிங்கம் பசியோடு இருந்தாலும் கெட்டுப்போன இறைச்சிகளை உண்ணாது’ என தெரிவித்திருந்தார். இக்கருத்துகள் சீமானுக்கானது என தவெகவினர் கூறுகின்றனர். அண்மையில் தாங்கள் புலிகள், அணில்கள் குறுக்கே வர வேண்டாம் என சீமான் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாகவே தாங்கள் அணில்கள் இல்லை, சிங்கம் என்று விஜய் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
News August 22, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.