News April 7, 2024

நட்சத்திரங்களின் கடல் எங்கே உள்ளது?

image

சுற்றுலாப் பயணிகள் காண விரும்பும் நட்சத்திரங்களின் கடல் என்ற இடம் மாலத்தீவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு இரவு நேரங்களில் விண்மீன்கள் வானில் இருந்து கீழே இறங்கி கடல் நீரில் மிதப்பது போன்ற காட்சி தோன்றும். இது பயோலுமினசென்ட் பிளாங்க்டன் எனப்படும் உயிரினங்களால் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காட்சியை ஏப்ரல் – ஆக்டோபர் காலக்கட்டத்தில் காண முடியும்.

Similar News

News March 11, 2026

எத்தனை முறை PM வந்தாலும் வெற்றி திமுகவுக்கே: சுதீஷ்

image

ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அறிவாலயத்தில் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூட்டணியால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்; இது தேமுதிகவினர் விரும்பிய கூட்டணி என்றார். அத்துடன் PM மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும், வரும் தேர்தலில் திமுக கூட்டணிதான் அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

எலும்புகள் வலுவாக இந்த 4 வகை உணவுகள் போதும்

image

*பால், மோர், வெந்தயம், எள், ராகி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் *முட்டையின் மஞ்சள் கரு, காளான் ஆகிய வைட்டமின் டி உணவுகள் *துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாதாம், வால்நட் போன்ற புரதம் நிறைந்தவை *வாழைப்பழம், பேரீச்சை, கடலை பருப்பு, பூசணி, சூரியகாந்தி விதை ஆகிய மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பவை. அதேநேரம், இனிப்புகள், குளிர்பானம், கூடுதல் உப்பு மற்றும் அளவுக்கதிமான காஃபின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

News March 11, 2026

பகத்சிங் பொன்மொழிகள்

image

*முதலாளித்துவத்தை தூக்கி எறிவதே புரட்சியின் நோக்கம். *கேட்காத காதுகளை உரத்த குரல்களால் கேட்க செய்ய முடியும். *மக்களது நம்பிக்கையினை பெற்றுள்ளவரையே சட்டம் தனது புனித தன்மையினை பெற்று இருக்கும். *குருட்டு நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. இது மனிதனது மூளையினை முடமாக்கி மனிதனை பிற்போக்கில் தள்ளி விடும். *இச்சமூகத்தின் உண்மை கடவுள் தொழிலார்களே.

error: Content is protected !!