News December 30, 2024
விமானத்தில் எங்கு அமர்ந்தால் பாதுகாப்பு?

சமீபத்திய விபத்துகளால், விமான போக்குவரத்தின் பாதுகாப்பு பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் ‘Aviation Disaster Law’ மற்றும் ‘Popular Mechanics’ இதழின் ஆய்வு தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதன்படி, முன் சீட்களில் அமர்பவர்களின் இறப்பு விகிதம் 38% ஆகவும், நடுத்தர சீட்களின் இறப்பு விகிதம் 39% ஆகவும் உள்ளது. ஆனால், பின் சீட்களில் அது 32% ஆக குறைந்து காணப்படுகிறது.
Similar News
News July 11, 2025
தனது பிராண்டுக்காக Photoshoot நடத்திய ஷ்ரத்தா

நடிகை ஷ்ரத்தா கபூர் இன்ஸ்டாவில் சிவப்பு நிற உடையில் ஒளிரும் நகைகளுடன் சில புகைப்படங்களை வெளியிட்டார். இந்த படங்களானது Palmonas நகை பிராண்டுக்காக எடுக்கப்பட்டதாகும். இந்த நிறுவனத்தின் 21% பங்குகள் ஷ்ரத்தாவிடம் தான் உள்ளன. அவர் அணிந்திருக்கும் நகைகள் தங்க முலாம் பூசிய வெள்ளி நகைகள் ஆகும். நடிகைகளிலேயே இன்ஸ்டாவில் அதிகம் Followers வைத்துள்ள ஷ்ரத்தா தன் பிராண்டை அங்கு பிரபலப்படுத்துகிறார்.
News July 11, 2025
குஜராத் பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆனது

குஜராத் மாநிலத்தில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
News July 11, 2025
ஜூலை 11…வரலாற்றில் இன்று!

1710 – முதல் இந்திய விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள். * 1966 – திரைப்பட இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். *1982 – இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றது. *1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியாவில் விபத்துக்குள்ளானதில் 261 பேர் உயிரிழந்தனர். *2006 – மும்பை ரயில் குண்டுவெடிப்புகளால் 209 பேர் உயிரிழந்தனர்.