News January 24, 2025
என்னை எங்க வந்து நிறுத்திருக்க பாத்தியா..!

சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், வளர்ப்புப் பூனையால் வேலையை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது லேப்டாப்பில் ராஜினாமா கடிதத்தை டைப் செய்து வைத்திருந்த அந்த பெண், வேலை போய்விட்டால் வருமானத்திற்கு என்ன செய்வது என யோசித்து அனுப்பாமலே வைத்துள்ளார். ஆனால், அவரது வளர்ப்பு பூனை தவறுதலாக Enter பட்டனை அழுத்தியுள்ளது. இதனால், அவர் தனது வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
NDA வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளது: நாராயணசாமி

புதுச்சேரியில் INDIA கூட்டணி வாக்குகளை விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என Ex CM நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், NDA கூட்டணி பிரிந்து கிடப்பதால், அந்த வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று விஜய் முன்னிலையில் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் தவெகவில் இணைந்தார். அத்துடன், டிசம்பரில், அங்கு விஜய் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
News November 28, 2025
மோடியின் S5 கொள்கைகள் தேவை: ராணுவ தளபதி

உலக ஒழுங்கு நிச்சயமற்ற & சிதைந்த நிலையிலேயே சென்று கொண்டிருப்பதாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார். சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2025 நிகழ்வில் பேசிய அவர், சர்வதேச அளவில் பெரும் சக்திகளின் போட்டி உலகை பல துருவங்களாக பிரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, வளம் என்ற PM மோடியின் S5 கொள்கைகளின் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
News November 28, 2025
நவம்பர் 28: வரலாற்றில் இன்று

*1890 – ஜோதிராவ் புலே நினைவுநாள்.
*1893 – நியூசிலாந்தில் முதல்முறையாக பெண்கள் வாக்களித்தனர்.
*1927 – மூத்த அரசியல்வாதி HV ஹண்டே பிறந்தநாள்.
*1964 – நாசா செவ்வாய் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
*1972 – பாரிஸ் நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


