News June 14, 2024

அண்ணாமலை எங்கே சென்றார்?

image

மழைக்காலத் தவளை போல கூவிக் கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கே சென்றார் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டியில் நடந்த திமுக வேட்பாளர் சிவாவை அறிமுகம் செய்து பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினின் நலத்திட்டங்களை பாராட்டும் வகையில் மக்கள் திமுக கூட்டணியை வெற்றிபெற வைத்தனர். தமிழகத்தில் தாமரை மலரும் என்றவர்களை இப்போது காண முடியவில்லை” என்றார்.

Similar News

News September 8, 2025

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

image

தற்போதைய வாழ்க்கை முறையில், குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விந்தணு எண்ணிக்கை குறைபாடு அதிகரித்து வருகிறது. பின்வரும் உணவு வகைகளை தவிர்த்தாலே, இந்த பாதிப்பை குறைக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள்:
★பீட்சா, இனிப்புகள், சோடா, ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும். ★அளவிற்கு அதிகமான மது, சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ★அதிக கொழுப்புள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.

News September 8, 2025

வரலாற்று தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா

image

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ODI-யில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது. ENG நிர்ணயித்த 415 என்ற இமாலய ஸ்கோரை துரத்திய அந்த அணி வெறும் 72 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. ஆவேசமாக பந்துவீசிய ENG-யின் ஆர்ச்சர் 4 விக்கெட் வீழ்த்தினார். முடிவில் 342 ரன்கள் வித்தியாசத்தில் SA தோற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி இதுதானாம்.

News September 8, 2025

PM மோடிக்கு சவால் விட்ட கெஜ்ரிவால்

image

அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பாக PM மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். அமெரிக்க பொருள்களுக்கு 75% வரிவிதித்து பிரதமர் தைரியம் காட்ட வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால், நாட்டு மக்கள் அவர் பின்னால் நிற்பார்கள் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கான 11% வரியை நீக்கி டிரம்ப் முன்பு பிரதமர் பணிந்ததாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!