News August 19, 2024

கைதி-2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

image

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் 2ஆம் பாகம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. வசூல் ரீதியில் பிரமாண்ட வெற்றிபெற்ற ‘கைதி’ படம் வெளிவந்தபோதே அதன் 2ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற படங்களை இயக்குவதில் பிசியாக இருந்ததால் ‘கைதி-2’ எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

Similar News

News March 24, 2026

மோடி, அமித்ஷாவுக்கு END நெருங்குகிறது: கெஜ்ரிவால்

image

மோடி, அமித்ஷாவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஒரு காலத்தில், மோடிக்கு எதிராக மீம் பதிவிட்டவர்கள் கூட கைதானதாக கூறிய அவர், ஆனால் இன்றோ, மோடி மீதான விமர்சனங்களால் SM பக்கங்கள் நிரம்பி வழிகின்றன என்றார். மேலும், மோடி & பாஜகவின் செல்வாக்க சரிந்து வருகிறது என்றும் ஆனாலும் அவர் இன்னும் தேர்தல்களில் வெல்கிறார் என்றால் அதற்கு EC தான் காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.

News March 24, 2026

சற்றுநேரத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

image

திருப்பதியில் ஜூன் மாதத்திற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பக்தர்கள் <>www.ttdevasthanams.ap.gov.in <<>>இணையதளத்தில் தங்களது முன்பதிவை செய்யலாம். அதேநேரத்தில், திருமலையில் ஜூன் மாதத்திற்கான தங்குமிட முன்பதிவானது பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் பலரும் முன்பதிவுக்காக காத்திருக்கின்றனர்.

News March 24, 2026

BREAKING: தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,720 குறைந்து ₹1,04,000-க்கும், கிராமுக்கு ₹340 குறைந்து ₹13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!