News March 24, 2025
ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்? – அறிவித்தது படக்குழு

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’, 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Similar News
News March 26, 2025
கத்தி முனையில் இளம்பெண் பலாத்காரம்

கடலூர் அருகே திருமணமான 29 வயது பெண் கத்திமுனையில் மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய சிவக்குமார், அதனை வீடியோ பதிவு செய்து தனது நண்பர் வினோத்திற்கும் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டிய வினோத், அப்பெண்ணை பலாத்காரம் செய்ததோடு ₹50,000, 3 சவரன் நகையை பறித்துள்ளார். மேலும், பணம் கேட்டு மிரட்டியதால் கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் அந்தப்பெண் புகார் கொடுத்துள்ளார்.
News March 26, 2025
ஏப்ரலில் அறிவிக்கப்படுமா அதிமுக – பாஜக கூட்டணி?

அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகிறதா என்ற கேள்விக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு. இதில், கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்றும், பிரிந்து சென்றவர்களை சேர்க்க நிர்பந்திக்க மாட்டோம் என்றும் பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 26, 2025
விலையை உயர்த்தக்கூடாது: அமைச்சர் எச்சரிக்கை!

ஜல்லி, எம்சாண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக கூறினார். தன்னிச்சையாக விலையை உயர்த்தினால் சம்பந்தப்பட்ட கிரஷர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.