News March 20, 2024

அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு எப்போது ?

image

மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டன. வேட்புமனு இன்று தொடங்கும் நிலையில், அதிமுக மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் நிறைவு செய்யவில்லை. நேற்று பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், தேமுதிகவை எப்படியாவது தக்கவைக்க அதிமுக விரும்புகிறது. இன்று அல்லது நாளைக்குள் அதிமுக கூட்டணி நிலைப்பாட்டோடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கையையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

2 பேரை தூக்கில் போட்ட சவுதி அரேபியா

image

வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 குடிமக்களை சவுதி அரேபிய அரசு தூக்கிலிட்டுள்ளது. இருவரும் ஒரு பயங்கரவாத குழுவில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், பாதுகாப்பு தளங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக சவுதி அரசின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

News November 9, 2025

இந்த டீ குடிச்சிருக்கீங்களா?

image

சுடச்சுட டீ குடிப்பதே பெரும்பாலோருக்கு ஹேப்பி டைமாக இருக்கிறது. ஒவ்வொரு வகை டீ-யும், தனித்தனி ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அவை என்னென்ன டீ, அதனால் என்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டீ பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.

News November 9, 2025

₹110 கோடிக்கு விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ OTT உரிமம்

image

விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகனுக்கு பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் படத்தின் முதல் பாலான தளபதி கச்சேரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனிடையே படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும் கிட்டத்தட்ட ₹110 கோடிக்கு ‘ஜனநாயகன்’ OTT உரிமம் விற்கப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!