News April 27, 2025

CBSE 10,12 தேர்வு முடிவுகள் எப்போது? புதுத் தகவல்

image

CBSE 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய மாணவர்கள், முடிவு எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர். அந்த முடிவுகள், கடந்த 2023-ம் ஆண்டு மே 10, மே 9-ம் தேதிகளில் வெளியாகின. இதேபோல் கடந்த 2024ம் ஆண்டு மே 15, மே 12-ம் தேதிகளில் வெளியாகின. இதை சுட்டிக்காட்டியுள்ள கல்வி ஆர்வலர்கள், இந்தாண்டும் மே மாதம் மத்தியிலேயே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். SHARE IT.

Similar News

News April 28, 2025

விராட் 50, க்ருனால் 50, பார்ட்னர்ஷிப் 100

image

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி & க்ருனால் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப், RCB அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. 163 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய RCB அணியின் படிக்கல் 0, பட்டிதார் 6, பெத்தெல் 12 என அவுட் ஆகினர். இருப்பினும் கோலி & க்ருனாலின் நிதானமான ஆட்டம் RCB-ஐ வெற்றியை நோக்கி நகர வைத்திருக்கிறது.

News April 28, 2025

கட்டாயத்தின் பேரில் நீக்கம்: தமிழிசை தாக்கு

image

இருண்ட கால ஆட்சியில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். TN அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விலகியுள்ள நிலையில், மக்கள் மன்றம், நீதிமன்றத்தின் கட்டாயத்தால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். இந்த நடவடிக்கை தானாக எடுக்கப்பட்டது அல்ல; தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார்.

News April 28, 2025

கல்லீரலை காக்க… இதை கவனியுங்க

image

உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரையை தவிருங்கள் *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்கள் *வலிநிவாரணி மாத்திரைகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட் உணவை தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும்.

error: Content is protected !!