News February 9, 2025

+2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

image

+1, +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News February 9, 2025

14 மீனவர்கள் கைது!

image

தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளது. சமீபகாலமாக நமது மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக, மீனவர்கள் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

News February 9, 2025

காலையில் எழுந்ததும் போனில் ரீல்ஸ் பாக்குறீங்களா?

image

காலையில் எழுந்தவுடன் போனில் ரீல்ஸ்களைப் பார்த்தால், Cortisol Hormone உச்சம் பெற்று, நாள் முழுவதும் மன அழுத்தம் பெறுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனைத் தவிர்த்து, சிறிது நேரம் வெயில் படும் இடத்தில் நிற்பதால், மன அழுத்தம் குறையும் என்றும் தெரிவிக்கிறார்கள். மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் டிவி, போனில் மூழ்காமல், சிறிது தியானம், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் என அறிவுறுத்துகின்றனர்.

News February 9, 2025

தைப்பூசத்தில் பத்திரப் பதிவு அலுவலகத்தை திறக்க எதிர்ப்பு

image

தைப்பூச நாளில் பத்திரப் பதிவு அலுவலகங்களை திறக்கக்கூடாது என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். பொது விடுமுறை என அறிவிக்கப்பட்ட தைப்பூச தினமான பிப்.11ம் தேதி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளது. இந்து சமூக மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் திராவிட மாடல் அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!