News March 26, 2024
‘துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியீடு?

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, ஒரு நல்ல தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மக்களவைத் தேர்தல் பணிகள் நடந்து வருவதால் எந்த ஒரு பெரிய படங்களும் வெளியாகாமல் இருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, ரமலான் பண்டிகை அன்று படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 5, 2025
நவம்பர் மாதமும் 3 கிரிக்கெட் லெஜண்ட்களும்

இந்தியாவின் பேட்டிங் சூப்பர் ஸ்டார்களான கவாஸ்கர், விராட் கோலி, சச்சின் ஆகிய மூவருமே WC வென்றவர்கள் தான். அதற்கு மேல் அவர்களுக்கும் நவம்பர் மாதத்துக்கும் ஒரு சுவாரஸ்ய கனெக்ஷன் உள்ளது. கவாஸ்கர் ODI-யில் இருந்து நவ.5, 1987-ல் ஓய்வுபெற்றார். 1988-ல் இதே நாளில் விராட் கோலி பிறந்தார். அடுத்த ஆண்டு விராட் பர்த் டேவுக்கு 10 நாள்கள் கழித்து (நவ.15, 1989) சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் களமிறங்கினார்.
News November 5, 2025
முடி சார்ந்த பிரச்னைகள் நீங்க இந்த Conditioner யூஸ் பண்ணுங்க

காஸ்ட்லியான Conditioner-களை வாங்கி முடியை பராமரிக்கிறீர்களா? வீட்டிலேயே இயற்கையான முறையில் Conditioner செய்யலாம். ➤கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள் ➤இவற்றை நன்றாக கலந்து, முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனிப்பகுதி வரை அப்ளை செய்யுங்கள் ➤ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும் ➤எப்போதும் போல் ஷாம்பு போட்டு அலசுங்கள். SHARE.
News November 5, 2025
பொதுத்தேர்வுக்காக 2 – 5 நாள்கள் வரை விடுமுறை

2025 – 26 கல்வி ஆண்டிற்கான <<18193947>>10<<>>, <<18194621>>12-ம் வகுப்பு<<>> பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. அதில், ஒவ்வொரு தேர்வுக்கும் 2 – 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான இந்த இடைவெளி என்பது மாணவர்கள் சிரமமின்றி படிக்கவும், மன அழுத்தமின்றி தேர்வு எழுதவும் உதவும் என உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


