News May 7, 2025
Income Tax Return தாக்கல் எப்போது துவங்கும்?

கடந்த 2024-25 நிதியாண்டிற்கான Income Tax Return-களை தாக்கல் செய்வதற்கு வரி செலுத்துவோர் ஆயத்தமாக உள்ளனர். Income Tax Return தாக்கல் செய்யும் முறையானது சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டேக்சஸ், அதற்கான படிவங்களை வெளியிட ஆரம்பித்த உடனேயே ஏப்ரல் மாதத்தில் துவங்கும். தற்போது ஏப்ரல் முடிவடைந்ததால் விரைவில் Income Tax Return தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 17, 2026
தொடரும் வேட்டை.. 7,800 சூதாட்ட தளங்கள் முடக்கம்

நேற்று ஒரேநாளில் 242 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபரில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அமலான நிலையில், இதுவரை 7,800 சூதாட்ட தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சூதாட்டத்தில் அடிமையாகி மக்கள் பணத்தை இழப்பதை தவிர்க்க, சூதாட்ட தளங்களை முடக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
News January 17, 2026
தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு பக்கம் தாவ இதுவா காரணம்?

அட்லியை தொடர்ந்து தற்போது லோகேஷும், அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, ஜூனியர் NTR நடிப்பில் நெல்சன் புதி படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழில் பெரும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதாலும், தெலுங்கில் ₹75 கோடி முதல் ₹100 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதாலும், தமிழ் இயக்குநர்கள் இத்தகைய முடிவை எடுப்பதாக கூறுகின்றனர்.
News January 17, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 583 ▶குறள்: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். ▶பொருள்: எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.


