News April 21, 2025
‘குட் பேட் அக்லி’ OTT ரிலீஸ் எப்போது?

அஜித் நடிப்பில் வெளியாகிய குட் பேட் அக்லி படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. உலகளவில் இப்படம் சுமார் 250 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மே இரண்டாம் வாரத்தில் படத்தை OTT-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 10, 2025
ஆக்ஷனில் இறங்கிய ராமதாஸ்; அன்புமணிக்கு செக்

பாமகவிலிருந்து அன்புமணியை தற்காலிகமாக நீக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால் கட்சி, சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோர வாய்ப்புள்ளது என்பதற்காக முன்கூட்டியே ராமதாஸ் தரப்பு சென்னை HC & உரிமையியல் கோர்ட்டில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. கட்சி, சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோரினால் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News September 10, 2025
அவ்வளோ தான் பஞ்சாயத்து முடிஞ்சுது!

‘கூலி’ ஃப்ளாஷ்பேக் சீனில் SK தான் நடித்தார் என்ற கமெண்ட்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்தன. லோகேஷ் பேட்டியில் De-aging முறையில் ரஜினியை தான் நடிக்க வைத்தோம் என கூறியும் பலரும் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை. ‘SK.. SK’ என்றே தொடர்ந்து கமெண்ட் செய்தனர். ‘ஒருவேள இருக்குமோ’ என பலரும் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், ஃபிளாஷ்பேக் சீனில் ரஜினி நடித்த போட்டோ வெளிவந்து, பஞ்சாயத்தை முடித்து வைத்துள்ளது.
News September 10, 2025
அதிமுகவில் அடுத்த பரபரப்பு.. EPS-க்கு பதில் இவரா?

EPS-க்கு எதிராக செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியதற்கு பின்னால், எஸ்.பி.வேலுமணி இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் கொங்குவில் EPS-க்கு இணையாக செல்வாக்கு படைத்தவர் வேலுமணி. இதனால், இனி ‘நானே முதல்வர்’ என்று அவர் காய்களை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறாராம். குறிப்பாக, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கும் இவரின் பங்கு முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.