News April 29, 2025
திமுகவினர் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?

ஆவணங்களிலிருந்து ‘காலனி’யை நீக்கினால் போதுமா, திமுகவினர் மனங்களில் இருந்து எப்போது அகலும் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மலை, பாணாம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மனிதக் கழிவு பூசப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூரச் செயல்கள் CM கவனத்திற்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சாடினார்.
Similar News
News November 16, 2025
ஆசிரியர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: 14,967 பணியிடங்கள்

கேந்திரிய வித்யாலயா & நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாகவுள்ள 14,967 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, UG, PG உடன் B.Ed (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,900 – ₹78,800 (பணிக்கு ஏற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News November 16, 2025
BREAKING: விடுமுறை அறிவிப்பு வெளியானது.. எங்கு தெரியுமா?

புதுச்சேரியில் 2026ஆம் ஆண்டில் 17 நாள்கள் அரசு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.1 ஆங்கில புத்தாண்டு, ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளுவர் தினம், ஜன.26 குடியரசு தினம், மார்ச் 20 ரம்ஜான் உள்பட 17 நாள்கள் அரசு விடுமுறையாக வருகிறது. முன்னதாக தமிழ்நாடு அரசு 2026-ம் ஆண்டு 24 நாள்கள் பொதுவிடுமுறை என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
PK நிலைமை தான் விஜய்க்கும்: தமிழிசை

லட்சக்கணக்கானோரின் வாக்குகளை SIR பறிப்பதாகவும், தவெக தொண்டர்களுக்கு SIR படிவங்களை அளிக்க மறுப்பதாகவும் <<18296708>>விஜய்<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதையெல்லாம் எப்படி தம்பி நம்புவது என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கட்சி ஆரம்பித்ததும் CM ஆக வேண்டும் என்று நினைத்தால், பிஹாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கும் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.


