News December 25, 2024
குழந்தை எப்போ பிறந்தது? த்ரிஷாவுக்கு சரமாரி கேள்வி

த்ரிஷா, தனது மகன் Zoro இறந்ததாகவும் தானும் குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் பதிவிட்டார். இது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. எப்போ உங்களுக்கு திருமணம் ஆச்சு? குழந்தை எப்போ பிறந்தது? என்பது போல கமெண்ட்கள் வந்தன. பின்னர் அவர் படங்களை பகிர்ந்தபோது அவர் வளர்த்த நாயின் பெயர் Zoro எனத் தெரிந்தது. முன்னாடியே சொல்லக்கூடாதா மேடம்? என நெட்டிசன்களின் ரியாக்ட் செய்துள்ளனர்.
Similar News
News July 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ₹400 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.
News July 8, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 83,356 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,446 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. நேற்று மாலை சற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த சந்தை இன்று சற்று சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
News July 8, 2025
திக்வேஷ் ரதிக்கு ஏறும் மவுசு

டெல்லி பிரீமியர் லீக் ஏலம் நேற்றைய முன்தினம் (ஜூலை 6) நடைபெற்றது. இதில், திக்வேஷ் ரதியை ₹38 லட்சத்துக்கு South Delhi Superstarz அணி வாங்கியுள்ளது. இது, அவர் IPL 2025 மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட தொகையைவிட அதிகமாகும். LSG அணியால் ₹30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர், கடந்த சீசனில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், திக்வேஷ் ரதிக்கு அடுத்தடுத்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.