News March 18, 2024
திருவண்ணாமலை கிரிவலம் எப்போது செல்லலாம்?

திருவண்ணாமலை என்றதும் நினைவிற்கு வருவது அண்ணாமலையாரும், கிரிவலமும் தான். மற்ற எந்த தலங்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்கு மட்டுமே பக்தர்களுடன் சேர்ந்து அண்ணாமலையாரும் கிரிவலம் செல்லும் உற்சவம் நடைபெறும். கைலாயத்தை வலம் வந்து வணங்கியதற்கு சமமான பலனை தரக் கூடியது கிரிவலம். எப்போது கிரிவலம் சென்றாலும் உயர்வான பலன் கிடைக்கும். என்றாலும் பெளர்ணமி நாட்களிலே அதிகளவில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
Similar News
News August 17, 2025
BCCIக்கு பும்ரா எழுதிய முக்கிய கடிதம்!

செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட்டு விடும். ரசிகர்களிடையே பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், அவர் BCCI-க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில், ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய கோப்பைக்கான பெஸ்ட் பிளேயிங் XI-ஐ கமெண்ட் பண்ணுங்க.
News August 17, 2025
ஜப்பான், இந்தோனேசியாவில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்!

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2:43 மணிக்கு ஜப்பானில் ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தகனாபே என்ற நகரில் இருந்து சுமார் 28 கிமீ தூரத்தில், 10 கிமீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ககோஷிமாவின் நாஸ் பகுதியிலும் ரிக்டர் அளவில் 3.0 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தோனேசியா அருகிலும் ரிக்டர் அளவில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
News August 17, 2025
துப்பாக்கி 2 கதை இருக்கு: AR முருகதாஸ்

தனது படங்களில், ‘துப்பாக்கி’ படத்தின் பார்ட் 2-வை மட்டுமே எடுக்க முடியும் என AR முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், அப்படத்தில் விஜய் ஆர்மிக்கு மீண்டும் செல்வார், அப்போது அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் (அ) இங்கு மீண்டும் வந்து வேறு ஒரு சம்பவத்தைக் கொண்டு கதையைத் தொடரலாம் என்றார். துப்பாக்கி 2 ஓகே ஆகுமா?