News October 24, 2024
சொத்துன்னு வந்துட்டா சொந்தம் என்ன பந்தம் என்ன..!

குடும்ப சொத்தை பிரிப்பதில் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஷர்மிளாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சரஸ்வதி பவர் நிறுவனத்தில் இருந்த தனக்கு சொந்தமான பங்குகளை ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றியதாக ஜெகன், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அண்ணன் -தங்கை உறவு சிதைந்து விட்டதாகவும், இனி அவருடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஜெகன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 24, 2025
அனைவருக்கும் ₹1,000 உரிமைத் தொகை.. வந்தது அப்டேட்

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியுள்ள மகளிருக்கு டிச.15-ம் தேதி முதல் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போதைய நடவடிக்கையால் லட்சக்கணக்கான மகளிர் பயனடைய உள்ளனர். SHARE IT.
News October 24, 2025
இரவில் தேன் சாப்பிட்டால்..

இரவில் தேன் சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான பலன்கள் என்னென்ன என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அதில், உள்ள நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க. இதுபோன்று வேறு ஏதேனும் நன்மைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
2026-ல் தங்கம் விலை எப்படி இருக்கும்?

பல்கேரியவைச் சேர்ந்த பாபா வாங்காவின் முன்னறிவிப்புகள் பலதும் நிஜத்தில் நடந்துள்ளன. அந்தவகையில், 2026-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான நிதி நெருக்கடி ஏற்படும் எனவும், பாரம்பரிய நிதி அமைப்புகள் சீர்குலையும் என்றும் கணித்துள்ளார். பாரம்பரிய அமைப்புகள் பாதிக்கப்பட்டால், அது நிச்சயம் தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அதன்படி தங்கத்தின் விலை 20 – 40% வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


